தகுதி.

5 வருடம்
தமிழ்நாடு அரசின் மேல்நிலைத் தேர்வுக்கு இணையான சிண்டிகேட்டால் அங்கீகரிக்கப்பட்ட 10 +2 மாதிரியின் கீழ் 45% மதிப்பெண்களுக்கு குறையாத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு பட்டப்படிப்பு பி.ஏ.எல்.எல்.பி சேர்க்கைக்கு தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களில் 5% மதிப்பெண்கள் சலுகை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வழங்கப்படும்.

3 வருடம்
3 ஆண்டு எல்.எல்.பி சட்டப்படிப்பிற்கு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, புதுதில்லியில் உள்ள இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் உறுப்புப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மூன்று ஆண்டுப் பல்கலைக்கழகப்
பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்.

முதுநிலை கல்வி
மூன்றாண்டு (LLB) சட்டப்படிப்பு முடித்தவர்கள் மொத்த மூன்றாண்டு மதிப்பெண்களை சேர்த்து 50 விழுக்காடுகள் குறையாமல் மற்றும் ஐந்தாண்டு (B.A.LL.B.) சட்டப்படிப்பு முடித்தவர்கள் மொத்த ஐந்தாண்டு மதிப்பெண்கள் சேர்த்து 50 விழுக்காடுகள் குறையாமல் எடுத்தவர்கள்
விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து சதவீதம் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.