நூலக பணிகள்

மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் நூல்கள் வழங்குவதே நூலகத்தின் முதன்மை பணியாகும்.

நூலக பணிகள்

  1. கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு மாணவர்களுக்கும் இரண்டு நூலக சீட்டுகள் வழங்கப்படும். ஒவ்வொரு சீட்டுக்கும் ஒரு நூல் வீதம் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு, புத்தகங்கள் திருப்பி அளிக்கப்படும் போது அந்த சீட்டுகள் அம்மாணவரிடம் ஒப்படைக்கப்படும்..
  2. புத்தகங்கள் எடுக்க விரும்பும் மாணவர்கள் அதற்கென உரிய விண்ணப்பத்தில் நூல் எழுத்தாளர் பெயர், நூலின் பெயர், மாணவரின் பெயர் மற்றும் வகுப்பு, தேதி ஆகியவற்றை முறையாக புர்த்தி செய்து நூல் வழங்கும் பிரிவில் அளிக்க வேண்டும்.
  3. நூல்கள் வழங்குவது மற்றும் திரும்ப பெறுவது முறையே காலை 10.30 மணிக்கும் மாலை 5.30 மணிக்குள்ளும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
  4. வேண்டிய நூல்கள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை தவிர்க்க விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போதே மாற்று நூல்கள் இரண்டுக்கு மேற்பட்டதை முறைப்படி எழுதிக் கொடுக்க வேண்டும்.
  5. நூல் திருப்பி அளிக்கப்பட வேண்டிய தேதி வேலை நாட்களில் வந்து அவ்வாறு திருப்பி அளிக்கப்படாத போது அதற்கான அபராத தொகையானது அவர் திருப்பி அளிக்கும் வேலை நாள் வரை மொத்தமாக சேர்த்து பெறப்படும். ஆனால் உரிய தேதி விடுமுறை நாளில் வந்து உடனடியாக அடுத்த வேலை நாளில் திருப்பி அளிக்கப்பட்டால் அபராத தொகை ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. எவ்வாறு இருப்பினும் உரிய தேதி விடுமுறை நாளில் வந்தால் அதற்கு முன்னரே நூல்கள் திருப்பி அளிக்கப்படும்.
  6. நூல் வழங்கும் பிரிவில் வழங்கும் நூல்கள் ஆனது மூன்று வாரங்களுக்கு வழங்கப்படும். மேலும் அவ்வாறு பெறப்பட்ட நூல்கலை அந்த நூலின் முன்பக்கத்தில் உள்ள சீட்டில் குறிப்பிட்டுள்ள தேதியின் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.