நூலக விதிகள்

  1. கல்லூரிக்கு வராததால் நூல்ககளைத் திருப்பித் தருவதில் தாமதம் என்ற காரணம் அனுமதிக்கப்படாது. அதிக தேவையுடைய நூல்கள் தேவைப்படும் குறுகிய காலத்திற்குக் கொடுக்கப்படும். நூலகரால் கோரப்பட்டால், வழங்கப்பட்ட நூல்கள் எந்த நேரத்திலும் திரும்பப் பெறலாம்.
  2. நூல்கள் வழங்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் புத்தகங்கள் புதுப்பித்துக் கொள்ளப்பட வேண்டும்.
    .
  3. உரிய தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புதுப்பித்தல் விண்ணப்பம் அளிக்கப்படலாம்.
  4. ஒரு மாணவரால் கோரப்பட்ட நூல் உடனடியாகக் கிடைக்கவில்லை என்றால், அவர் தனக்காக நூல் முன்பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.
  5. நூல் பெற்று செல்லும் மாணவர், அந்நூல் சேதாரம் எதுவுமின்றி நல்ல நிலையில் உள்ளதா என்பதை அவரே உறுதி செய்து கொள்ள வேண்டும். நூலுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் உடனடியாக நூலகரிடம் தெரிவிக்க வேண்டும். தவறினால் நூல் வழங்கப்பட்ட மாணவர் ஒரு நல்ல நூலை மாற்றாக வழங்க பொறுப்பேற்க வேண்டும்.
  6. ஒரு நூலை பெற்றுக் கொண்ட மாணவர் அதனை தொலைத்து விட்டால், அந்நூல் போன்றே வேறொரு புதிய நூலினை அளிக்க வேண்டும். அல்லது அந்த நூலின் விலையை விட ஐந்து மடங்கு அல்லது அதற்கு மேல் செலுத்த வேண்டும். இல்லையெனில் மாற்றுச் சான்றிதழ் மாணவருக்கு வழங்கப்படாது.
  7. நூலின் தொகுப்பின் ஒரு குறிப்பிட்ட தொகுதி தொலைந்துவிட்டால் அல்லது சேதமடையும் பட்சத்தில், மாணவர் அதற்கு பதிலாக முழு நூலின் தொகையையும் செலுத்த வேண்டும்.
  8. நூலக அபராத தொகை அனைத்தும் நூலகரால் அறிவிக்கப்பட்ட தேதியின் வார இறுதிக்குள் செலுத்தப்பட வேண்டும். அபராதம் வைத்திருப்பவர்களுக்கு நூலக நூல்கள் வழங்கப்படாது.
  9. நூல் வழங்கும் பிரிவில் பெறப்பட்ட நூல்கள் அனைத்தும் கல்வியாண்டின் கடைசி வேலை நாளிலோ அல்லது முதல்வரால் அறிவிக்கப்பட்ட வேறு தேதியிலோ நூலகத்திற்குத் திருப்பி தரப்படும். நூல்கள் அந்த தேதிக்கப் பிறகு வழங்கப்படாது.
  10. நூல்கள் திருப்பித் தரப்படாவிட்டால், கடைசி வேலை நாளுக்குப் பிறகு ஒரு நாளுக்கு ஒரு நூலிற்கு ரூ.2/- என்ற விகிதத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு மாணவர் கடைசி வேலை நாளிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ நூல்களை திருப்பித் தரத் தவறினால், அவரது அந்த செயலானது தவறான நடத்தையாகக் கருதப்பட்டு, அவர் பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குத் அனுமதிக்கப்படமாட்டார்.
  11. மாணவர்கள் கல்விக் கட்டணத்துடன் குறிப்பிட்ட நூலக காப்புத்தொகை செலுத்த வேண்டும். நூலக நிலுவைத் தொகைகள் ஏதேனும் இருந்தால், கல்லூரியை விட்டு வெளியேறும் போது திரும்பப் பெறப்படும்